Suzlon Energy: சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்துக்கு குவியும் ஆர்டர்கள்... எகிறும் பங்கு விலை... 3 ஆண்டுகளில் 1,544% லாபம் !!!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமான திகழும் சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் புதிய கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது 29.4 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்கு பிரைட்நைட் நிறுவனத்திடம் இருந்து இந்த ஆர்டர் பெறப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தத் திட்டத்தின் கீழ், நிறுவனம் அதன் S120 - 140 WTGகளின் 14 அலகுகளை கொண்ட காற்றாலை ஜெனரேட்டர்களை அமைக்கும். அதன்படி ஒவ்வொன்றும் 2.1 மெகாவாட் திறன் கொண்ட மகாராஷ்டிராவின் உஸ்மானாபாத்தில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் காற்றின் திறனை வழங்குதல், நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவை அடங்கும். இதுமட்டும் இல்லாமல் இவற்றை அமைத்த பிறகு செயல்பாடு மற்றும் பராமரிப்பு சேவையை வழங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் பிரைட்நைட் ந்றுவனத்திடம் இருந்து பெறப்படும் முதல் ஆர்டர் ஆகும்.

உலகளாவிய மின் உற்பத்தியாளர் பிரைட்நைட் மகாராஷ்டிராவின் உஸ்மானாபாத்தில் 100 மெகாவாட் காற்றாலை-சூரிய சக்தி திட்டத்தை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் C&I வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

2023ம் ஆண்டு ஆகஸ்ட் நிலவரப்படி, நிறுவனம் மொத்தம் 1,815.1 மெகாவாட் ஆர்டர்களை பெற்றுள்ளது. 2019ம் ஆண்டுக்கு பிறகு அதிக ஆர்டர்களை இந்த ஆண்டு சுஸ்லான் நிறுவனம் பெற்றுள்ளது.

சுஸ்லான எனர்ஜி நிறுவனம் தனது கடனைக் குறைக்கும் நோக்கில் QIP மூலமாக ரூ.2,000 கோடி வரை நிதி திரட்டுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை உருவாகியது.

சுஸ்லான் எனர்ஜியின் நிறுவனத்தின் பங்கு விலை NSE சந்தையில் வெள்ளிகிழமை வர்த்தக முடிவில் 1.57 சதவிகிதம் சரிந்து ரூ 25.10 ஆக முடிவடைந்தது.

அதே நேரத்தில் சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த மூன்று ஆண்டுகளில் 1,544 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்துக்கு அதிக அளவில் ஆர்டர் கிடைத்தாலும் அதன் மூலமாக நிறுவனம் லாபம் ஈட்டுவதற்கு நீண்ட காலம் ஆகும் என கூறப்படுகிறது.


(துறப்பு: THE ECONOMIC TIMES இலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. நாங்கள் பகிரும் உள்ளடக்கத்தின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இருப்பினும், இந்தத் தகவலின் முழுமை, துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவோ உத்தரவாதம் அளிக்கவோ இல்லை. . மேலும், THE ECONOMIC TIMES இலிருந்து பகிரப்படும் உள்ளடக்கத்தில் வேண்டுமென்றே எந்தவொரு தனிப்பட்ட, நிறுவனம் அல்லது பொருள்களுக்கு எதிரான எந்த மீறல்களும், நகல்களும் அல்லது தவறான தகவல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம். நெறிமுறை பத்திரிகை தரநிலைகளுக்கு இணங்க உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறோம். THE ECONOMIC TIMES அல்லது வேறு எந்த மூலத்திலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை சுயாதீனமாகச் சரிபார்த்து, அந்தத் தகவலின் அடிப்படையில் எந்தச் செயலையும் எடுப்பதற்கு முன் வாசகர்களும் பயனர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். THE ECONOMIC TIMES அல்லது பிற ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்த விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். தகவலின் துல்லியம் மற்றும் ஒருமைப்பாடு காலப்போக்கில் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும், மேலும் இதுபோன்ற தகவல்களை நம்பும்போது புதுப்பிப்புகள் அல்லது திருத்தங்களைச் சரிபார்க்குமாறு வாசகர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.)***

Comments

Popular posts from this blog

Flying Hanuman Temple in Odisha village of hinjilicut

World Famous Kulasekharapatnam Dussehra

National Health Authority Free Insurance Rs;500000 Lakh for Indian Citizen by Ministry of Health and Family Welfare