200,00,00,000 கிமீ தூரத்தில் இருந்து வந்த மண்.. வெளியாகுமா பூமி ரகசியம்.? பெரிய ஆய்வுக்கு தயாரான நாசா!
ஒசைரிஸ்-ஆர்எக்ஸ் திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்த மாதிரிகள் முக்கியமானவை. ஏனெனில் பென்னு போன்ற சிறுகோள்கள் நமது சூரிய குடும்பத்தின் ஆரம்பகால வரலாற்றில் "டைம் கேப்சூலாக" இருக்க முடியும். நமது கிரகம் மற்றும் சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிய இந்த பென்னு சிறுகோள் மாதிரி உதவும். விண்வெளியின் முக்கியமான இடத்தில் இருந்து சிறுகோள் மாதிரிகளை சுமந்து சென்ற நாசாவின் முதல் விண்வெளி காப்ஸ்யூல் ஏழு வருட பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று உட்டா பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது. சுமார் 200கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுகோளில் இருந்து இந்த மாதிரியை நாசா பூமிக்கு கொண்டு வந்துள்ளது. பூமியில் இருந்து, ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 63,000 மைல்கள் அதாவது 100,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து காப்ஸ்யூலை வெளியிட்டது. அந்தக் காப்ஸ்யூல் சுமார் நான்கு மணி நேரம் கழித்து, பாராசூட் வழியாக அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான உட்டா பாலைவனத்தில் இருக்கும் பயிற்சி மையத்தில் தரையிறங்கியது. அந்தக் காப்ஸ்யூலில் பென்னு எனப்படும் கார்பன் நிறைந்த சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட மு...