நிலவுக்கான இந்திய தூதராக மாறும் ரோவர், லேண்டர்: சிக்னல் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி !!
நிலவில் உறக்க நிலையில் இருந்த பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. நிலவுக்கான இந்திய தூதராகதான் இவை இரண்டும் மாறும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். சென்னை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, கடந்த மாதம் 23-ந் தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் வெற்றி பயணத்தை முடித்து கொண்டு நிலவில் வெற்றிகரமாக மென்மையாக தரை இறங்கி ஆய்வுப்பணியில் ஈடுபட்டது. அதன் மூலம் கிடைத்த பல்வேறு தரவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு ஒரு நிலவு நாள் முடிவடைந்து இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் சிவசக்தி புள்ளியில் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன. நிலவ...