நிலவுக்கான இந்திய தூதராக மாறும் ரோவர், லேண்டர்: சிக்னல் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி !!

நிலவில் உறக்க நிலையில் இருந்த பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. நிலவுக்கான இந்திய தூதராகதான் இவை இரண்டும் மாறும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, கடந்த மாதம் 23-ந் தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் வெற்றி பயணத்தை முடித்து கொண்டு நிலவில் வெற்றிகரமாக மென்மையாக தரை இறங்கி ஆய்வுப்பணியில் ஈடுபட்டது.

அதன் மூலம் கிடைத்த பல்வேறு தரவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு ஒரு நிலவு நாள் முடிவடைந்து இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் சிவசக்தி புள்ளியில் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

நிலவுக்கான இந்திய தூதர்

அப்போது, நிலவின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருந்தது. இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியம் இல்லை. இருந்தாலும் அவற்றை மீண்டும் 14 நாட்களுக்கு பிறகு அதாவது கடந்த 22-ந்தேதி நிலவில் உறக்கத்தில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மீது ஒரு நிலவு நாள் அதாவது 14 நாட்கள் முடிந்து தற்போது சூரிய ஒளி பட தொடங்கி உள்ளது. இதனால் திட்டமிட்டபடி கடந்த 22-ந்தேதி மீண்டும் அதனை செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை.

சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தவறும் பட்சத்தில், பிரக்யான் ரோவரையும், விக்ரம் லோண்டரையும் இனி நிலவுக்கான இந்திய தூதராகதான் இவை இரண்டும் மாறும் நிலை ஏற்படலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

(துறப்பு:  தினத்தந்தி இலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. நாங்கள் பகிரும் உள்ளடக்கத்தின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இருப்பினும், இந்தத் தகவலின் முழுமை, துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவோ உத்தரவாதம் அளிக்கவோ இல்லை. . மேலும்,  தினத்தந்தி இலிருந்து பகிரப்படும் உள்ளடக்கத்தில் வேண்டுமென்றே எந்தவொரு தனிப்பட்ட, நிறுவனம் அல்லது பொருள்களுக்கு எதிரான எந்த மீறல்களும், நகல்களும் அல்லது தவறான தகவல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம். நெறிமுறை பத்திரிகை தரநிலைகளுக்கு இணங்க உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறோம். தினத்தந்தி அல்லது வேறு எந்த மூலத்திலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை சுயாதீனமாகச் சரிபார்த்து, அந்தத் தகவலின் அடிப்படையில் எந்தச் செயலையும் எடுப்பதற்கு முன் வாசகர்களும் பயனர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். தினத்தந்தி  அல்லது பிற ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்த விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். தகவலின் துல்லியம் மற்றும் ஒருமைப்பாடு காலப்போக்கில் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும், மேலும் இதுபோன்ற தகவல்களை நம்பும்போது புதுப்பிப்புகள் அல்லது திருத்தங்களைச் சரிபார்க்குமாறு வாசகர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.)***


Comments

Popular posts from this blog

Flying Hanuman Temple in Odisha village of hinjilicut

10000 Cr, Gaganyaan Mission- India's First Vyommitra, a female humanoid robot (ISRO) - 2024 !

World Famous Kulasekharapatnam Dussehra